Parasite: கொரியன் படத்தின் விமர்சனம், முடிவின் விளக்கம்

Parasite (பாராசைட்) 2019ல் ரிலீஸ் ஆன ஒரு கொரியன் படம். ஆஸ்கார் அவார்டு வாங்கிய அருமையான , வித்தியாசமான படம். படத்தை ஏற்கனவே பார்த்த பலர் , இந்த படத்தினுடைய மைய கருத்து என்னனு யோசிச்சுக்கிட்டு இருக்கலாம்… இதை பற்றி பேசுவதற்கு முன்னால், கதையை சுருக்கமா சொல்லிட்டு, அதற்கு அப்புறம் கதை, பொருள் பற்றி விவாதிக்கலாம்.

For the explanation in English for the 2019 Korean Film Parasite, go here – Parasite Movie Explained

Parasite (பாராசைட்): விளக்கம் வீடியோ

Parasite (பாராசைட்): கதை விளக்கம்

இப்போ கதைக்கு போவோம். கதையில் இரண்டு குடும்பங்கள். ஒன்று – கிம்ஸ், இன்னொன்று பார்க். கிம்ஸ் ரொம்ப ஏழை. பேஸ்மென்ட் வீட்டில வாசிக்கிறவங்க. பார்க் குடும்பம் பணக்காரர்கள். மிக பெரிய வீட்டில இருக்கிறவங்க. பல வேலை ஆட்கள்னு வசதியா வாழறாங்க.

ஒரு நாள்… கிம்ஸ் குடும்பத்து பையன் , பார்க்கோட பெண்ணுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்கிற சான்ஸ் கிடைக்குது. இதற்கு பிறகு நடக்கிற சம்பவங்கள் மிக சுவாரஸ்யமாக போகும். இந்த கிம்ஸ் பையன், பார்க் வீட்டில நுழைஞ்ச பிறகு, அங்கே ஏற்கனவே இருக்கிற வேலை ஆட்களை ஒவ்வொருவராக, தந்திரமா வெளியே அனுப்பிச்சிட்டு, கிம்ஸ் குடும்பம் முழுவதும் உள்ளே நுழைஞ்சிடுறாங்க.

Parasite (பாராசைட்): படத்தில் ட்விஸ்ட்

ஒரு நாள், பணக்கார பார்க் குடும்பம் அவங்க பையனோட பிறந்தநாள் கொண்டாட வெளியே போறாங்க.
அந்த சமயத்தில கிம்ஸ் குடும்பம் முழுவதும் , அந்த பெரிய வீட்டில , ட்ரின்க் பண்ணிக்கிட்டு ஜாலியா கொண்டாட்டிருக்காங்க. அந்த சமயத்தில இதுக்கு முன்னாடி இருந்த மெய்ட் கதவை தட்டி, தன்னை உள்ளே விடும்படி கெஞ்சறா. இதில் ஆச்சர்யமான ஒரு விஷயம் என்னன்னா, இந்த மெய்ட்ன் கணவன் பல வருடமா அந்த வீட்டு பங்கர்ல, கடன்காரன் தொல்லை தாங்க முடியாம, மறைஞ்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கார்னு தெரியுது!

வெளியே போன பார்க் குடும்பம் , மழை காரணமா திடீர்னு திரும்பி வந்திடறாங்க. பழைய மெய்ட்ய்யும் அவள் கணவரையும் பங்கர்ல அடிச்சுப்போட்டுட்டு, கிம்ஸ் குடும்பம் நைசா வெளியேறி அவங்க வீட்டுக்கு போயிடறாங்க. அவங்க வீடு இருக்கிற ஏரியா முழுவதும் தாழ்வான பகுதியில் இருப்பதால், எல்லார் வீட்டிலேயும் மழைத்தண்ணீர் புகுந்திடுது. வேற வழியில்லாம எல்லோரும் வெளியே தூங்கறாங்க!

மறு நாள் , பார்க் தன்னுடைய மகனுக்கு பிறந்தநாளை கொண்டாட பிளான் பன்றாரு . கிம்ஸ் குடும்பமும் இந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு வராங்க. இதற்கு பிறகு நடக்கும் காட்சிகள் விறுவிறுப்பான, செம்ம அக்க்ஷன், அடிதடி, கொலை அப்படீன்னு போகும்.

Parasite (பாராசைட்) படம் முடிவு

பணக்கார பார்க் கொல்லப்படுகிறார். கொலை செய்த கிம் , Bunker ல பதுங்கிக்கிறார். கிம்ஸ் மகன், ண்டையில , தலையில அடிபட்டதுனால கோமா நிலைக்கு போயிடறான். பல நாள் கழித்து , கிம்ஸ் மகனுக்கு நினைவு திரும்புது, பங்கர்ல பதுங்கியிருக்கிற கிம் மோர்ஸ் கோட் (Morse Code) மூலமா, தினமும் லைட் அடிச்சு , தான் இருக்கிறதை தெரிவிக்கிறார். ஒரு நாள் மகன் இதை பார்த்து புரிஞ்சிக்கிறான்.

கிம்ஸ் மகன் எதிர்காலத்துல , தான் இந்த வீட்டை வாங்கி , தன அப்பாவை மீட்பதாக ஒரு சீன் வருது. அனால், அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், பொருளாதார ஏற்ற தாழ்வு இருப்பதால், அவ்வளவு பெரிய செல்வத்தை அடைய முடியாது என்ற கருத்தை கடைசி கட்சி மூலம் சொல்லி படம் முடியுது.

Parasite (பாராசைட்) படத்தின் அர்த்தம்

Parasite (பாராசைட்) என்றால் ஒட்டுண்ணி. அதாவது ஒரு உயிரினம் , இன்னொருவர உயிர் சத்தில் வாழ்வது.
இந்த படத்தில் யார் உண்மையான Parasite?

  • பணக்கார வீட்டில் தந்திரமாக நுழைந்து வாழும் கிம்ஸ் குடும்பமா ?
  • இல்லை, பங்கரில் மறைந்து வாழ்ந்த பழைய மெய்ட் ன் கணவரா ?
  • இல்லை, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சி வாழும் பணக்கார பார்க் குடும்பமா ?

இந்த படத்தின் டைரக்டர் ஜூன் ஹோ வின் மற்ற படங்களை ம்பார்த்திருந்தால் ஒன்று தெரியும். அவர் படங்களின் முடிவில் , தெளிவாக யார் ஹீரோ, யார் வில்லன் என்று உணர முடியாது. இந்த படத்தில் வரும் எல்லோருமே , ஒரு வகையில் Parasite தான்.

கிம் போல இருக்கும் பல ஏழைகள் தங்கள் சுய நலத்திற்காக, மற்ற ஏழைகளின் வேலை வாழ்க்கையை கெடுப்பதில்லை . ஆனா கிம்ஸ் குடும்பம் கவலைப்படாம செய்யறாங்க. பணக்கார பார்க் குடும்பம், மழையினால் வீடு இழந்த ஏழைகளின் கஷ்டத்தை கொஞ்சம் கூட உணரவில்லை.. அதுக்கு பதிலா மழையையும், அழகான வானத்தையும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ரொம்ப நேர்த்தியான வரும் பழைய மெய்ட் தன கணவனை காப்பாத்த, பார்க் குடும்பத்தின் வீட்டை பயன் படுத்தறா.

கடைசியா இதில் சொல்லப்படும் மைய கருத்து – படத்தில் வரும் எல்லோருமே ஒரு வகையில் Parasite தான். இதற்கு ன்பொருளாதார ஏற்ற தாழ்வே முக்கிய காரணம்.

Leave a Comment

Messenger icon
Send message via your Messenger App